தமிழகத்தில் இன்று பல்வேறு மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் உள்ள டெல்டா மாவட்டங்கள் உள்ளிட்ட இடங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அதன்படி, டெல்டா மாவட்டங்கள், கடலூர், தேனி, திண்டுக்கல், அரியலூர், பெரம்பலூர், திருச்சி, கரூர், மதுரை, விருதுநகர், புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் இன்று கன மழை பெய்யலாம்.
மேலும் புதுச்சேரியின் காரைக்காலில் இன்று கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும், சென்னையில் இரண்டு நாட்களுக்கு லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு எனவும் வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.