Categories
சென்னை மாவட்ட செய்திகள்

கீழே இறக்கி விட்ட கண்டக்டர்…. அடித்து உதைத்த வாலிபர்கள்…. சென்னையில் பரபரப்பு…!!

டிக்கெட் எடுக்காததை கண்டித்து கீழே இறங்கி விட்டதால் பேருந்து கண்டக்டரை 2 வாலிபர்கள் சரமாரியாக தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை மாவட்டத்திலுள்ள அயப்பாக்கம் வீட்டுவசதி வாரிய குடியிருப்பில் ஈஸ்வரன் என்பவர் வசித்து வருகிறார். இவர் அரசு பேருந்தில் கண்டக்டராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் ஆவடியில் இருந்து கீழ்க்கொண்டயார் நோக்கி சென்ற அரசு பேருந்தில் ஈஸ்வரன் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார். இதனை அடுத்து கலரப்பாக்கம் பேருந்து நிறுத்தத்தில் ஏறிய 2 வாலிபர்களிடம் ஈஸ்வரன் டிக்கெட் எடுக்குமாறு கேட்டுள்ளார். ஆனால் அந்த வாலிபர்கள் டிக்கெட் எடுக்க மறுப்பு தெரிவித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் ஈஸ்வரன் பேருந்தை நிறுத்தி 2 பேரையும் கீழே இறக்கி விட்டுள்ளார்.

இதனால் கோபமடைந்த வாலிபர்கள் பேருந்து மீண்டும் அந்த வழியாக வரும் என்பதை எதிர்பார்த்து அங்கேயே காத்துக்கொண்டிருந்தனர். இந்நிலையில் பேருந்து கலரப்பாக்கம் பேருந்து நிறுத்தத்திற்கு வந்தவுடன் 2 வாலிபர்களும் ஈஸ்வரனின் சட்டையை பிடித்து இழுத்து சரமாரியாக தாக்கி விட்டு அங்கிருந்து தப்பி ஓடினர். இதுகுறித்து ஈஸ்வரன் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் தப்பியோடிய வாலிபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

Categories

Tech |