சிதம்பரம் பொன்னம்பலம் நகரச் சேர்ந்த சண்முகம், கலராணி தம்பதியினர் வசித்து வருகின்றார்கள். சம்பவத்தன்று இவர்கள் இருவரும் இருசக்கர வாகனத்தில் சிதம்பரம் வடக்கு வீதியில் உள்ள ஒரு வங்கிக்கு வந்துள்ளனர். அங்கு தங்களது நகையை அடகு வைத்துவிட்டு ஒரு லட்சத்தை பெற்றுள்ளனர். பணத்தை மோட்டார் சைக்கிளில் இருக்கைக்கு கீழ் பகுதியில் உள்ள பெட்டியில் உள்ளே வைத்து பூட்டிவிட்டு அங்கிருந்து புறப்பட்டு உள்ளனர். அப்போது சிதம்பரம் மேல வீதியில் உள்ள ஒரு கடைக்கு சென்று விட்டு தேவையான பொருட்களை சண்முகம் வாங்கிக் கொண்டிருந்தார். கலா ராணி மட்டும் இரு சக்கர வாகனம் அருகே நின்று கொண்டிருந்தார்.
அங்கு மோட்டார் சைக்கிளில் வந்த இரண்டு பேர் கலராணியிடம் உங்கள் பணம் அறுபது ரூபாய் கீழே கிடக்கிறது என தெரிவித்துள்ளனர். உடனே கீழே குனிந்து அந்த பணத்தை எடுத்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி அந்த நபர்கள் ஸ்கூட்டர் சீட் பூட்டை உடைத்து அதில் வைத்திருந்த ஒரு லட்சத்தை எடுத்துள்ளனர். இதனை பார்த்த கலா ராணி திருடன் திருடன் என்று கூச்சலிட்டு உள்ளார். ஆனால் அவர்கள் பணத்துடன் அங்கிருந்து தப்பி சென்று விட்டனர். இது பற்றி கலா ராணி சிதம்பரம் நகர போலீசில் புகார் அளித்துள்ளார். மேலும் அதன் பெயரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். வங்கியில் இருந்து சண்முகம் பணம் எடுத்து வருவதை நோட்டமிட்ட மர்ம நபர்கள் தான் பணத்தை கொள்ளை அடித்து சென்றிருக்க முடியும் என கருதி அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை கைப்பற்றி போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு இரண்டு பேரையும் தேடி வருகின்றார்கள்.