கவிஞர் வைரமுத்து ரஷ்யா உக்ரைன் போர் குறித்து தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார்.
உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா நேற்று போர் தொடுத்துள்ளது. மேலும் உக்ரைன் நாட்டின் முக்கிய நகரங்கள் மீது ரஷ்யா சரமாரியாக குண்டுகள் வீசி வருகிறது. இந்நிலையில் ரஷ்யாவின் ஏவுகணை தாக்குதல் காரணமாக உக்ரைன் நிலைகுலைந்து போய் உள்ளது. நேற்றைய தாக்குதல்களில் உக்ரைன் படைவீரர்கள், பொதுமக்கள் என 100க்கும் மேற்பட்டோர் பலியானதாக தகவல் வெளியாகியுள்ளது. ரஷ்யாவின் 2 ஹெலிகாப்டர்களை உக்ரைன் படையினர் வீழ்த்தினர். 2 ரஷிய துருப்புகளை உக்ரைன் ராணுவம் சிறைப்பிடித்து உள்ளது.
இன்னும் கொரோனா மிரட்டலில் இருந்தே மீளாத நிலையில் ரஷ்யா உக்ரைன் இடையேயான போர் உலக நாடுகள் மத்தியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் கவிஞர் வைரமுத்து ரஷ்யா உக்ரைன் போர் குறித்து தனது டிவிட்டர் பக்கத்தில் ‘நான் போரை வெறுக்கிறேன்’ என உருக்கமாக பதிவிட்டுள்ளார். அதில் அவர் “நான் போரை வெறுக்கிறேன். அது உலகத்தின் விலா எலும்புகளை பாதிக்கும். கீவ் நகரத்தில் விழுந்த குண்டு கீரிப்பட்டியின் கீரைக்காரி கூடையை உடைக்கும். ரஷ்யா போரை நிறுத்திவிடவேண்டும் ரஷ்யா மீது ஜி7 நாடுகளின் பொருளாதாரத் தடைகள் நீக்கப்பட வேண்டும். நான் போரை வெறுக்கிறேன்” இவ்வாறு வைரமுத்து பதிவிட்டுள்ளார்.