கீவ் நகரில் ரஷ்ய படையின் தாக்குதலால் மெட்ரோ சேவை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த பிப்ரவரி மாதம் 24 -ஆம் தேதி உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்தது. இந்த போரில் உள்கட்டமைப்புகள், மின் நிலையங்கள் போன்றவற்றை தகர்ப்பதில் ரஷ்ய இராணுவம் மிகவும் தீவிரமாக இருந்தது. இதற்காக ரஷ்ய ராணுவம் ட்ரோன் மற்றும் ஏவுகணை உள்ளிட்ட பல்வேறு தாக்குதல் முறைகளை பயன்படுத்தி வருகிறது. இதனால் உக்ரைனில் உள்ள பல பகுதிகளில் மின்சாரம், குடிநீர் மற்றும் உணவு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் உக்ரைன் தலைநகர் கீவ் நகரத்தில் இன்று அதிகாலை ரஷ்ய படைகள் தொடர்ந்து தாக்குதல் நடத்தியுள்ளனர். இதனால் அங்குள்ள உள்கட்டமைப்புகள் சேதமடைந்து இருப்பதால் குடிநீர் விநியோகம் தடைபட்டுள்ளது. மேலும் மெட்ரோ சேவைகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படுவதாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.