சத்தீஸ்கரில் வைக்கப்பட்ட பிரஷர் குக்கர் வெடிகுண்டை பாதுகாப்பு படையினர் கண்டறிந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சத்தீஷ்கர் மாநிலம் ராஜ்நாத்காவான் மாவட்டத்திலுள்ள பகர்கட்டா சாலையோரம் பிரஷர் குக்கர் ஒன்று கிடந்தது. இதனை பார்த்து சந்தேகம் அடைந்த பொதுமக்கள் புகார் அளித்துள்ளனர். இதனைத்தொடர்ந்து அந்த பகுதிக்கு வந்த இந்தோ- திபெத்திய எல்லை பாதுகாப்பு படையினர் அதில் வெடிகுண்டு இருப்பதை கண்டறிந்துள்ளனர்.
5 லிட்டர் கொள்ளளவு கொண்ட அந்த குக்கரில் சக்தி வாய்ந்த வெடி குண்டுகளை நிரப்பி வைத்துள்ளனர். பாதுகாப்பு படையினரால் கைப்பற்றப்பட்ட அந்த வெடிகுண்டு பின்னர் செயலிழக்கச் செய்யப்பட்டது. இதனால் மிகப்பெரும் பாதிப்பு தவிர்க்கப்பட்டது.