Categories
தேசிய செய்திகள்

குக்கா் குண்டு வெடிப்பு சம்பவம்: குற்றவாளி WhatsApp-ல் ஆதியோகி சிவன் படம்…. பின்னணி என்ன?… போலீஸ் தீவிர விசாரணை….!!!!

மங்களூருவில் ஆட்டோ ஒன்றில் நிகழ்ந்த குக்கா் குண்டு வெடிப்பு சம்பவத்திற்கு காரணமான குற்றவாளி தன் வாட்ஸ் அப் டிஸ்ப்ளே புகைப்படமாக கோவையில் அமைந்திருக்கும் ஆதியோகி சிவன் சிலையை வைத்து இருந்தது காவல்துறையினருக்கு பல சந்தேகங்களை எழுப்பி இருக்கிறது. சென்ற செப்டம்பர் மாதம் தமிழகத்தில 3 நாட்கள் வந்து தங்கியிருந்தபோது, குற்றவாளி முகமது ஷாரிக் (24) எடுத்த அந்தப் புகைப்படத்தை தன் வாட்ஸ்அப் டிஸ்ப்ளேவில் வைத்திருந்தது ஏன் என்பது குறித்து விசாரணை நடந்து வருகிறது.

தன் அடையாளத்தை மறைக்க விரும்பாத குற்றவாளி முகமது ஷாரிக், குக்கர் வெடி குண்டுடன் தாக்குதல் நடத்துவதற்கு முன் ஐஎஸ் பயங்கரவாதிகளைப் போல புகைப்படம் எடுத்துக்கொண்டதும், அவர் நடந்து செல்லும் வீடியோவும் தொடர்ந்து வெளியாகி வருகிறது. அவ்வாறு வாட்ஸ்அப்-ல் ஆதியோகி சிவலிங்கத்தின் புகைப்படம் வைக்கபட்டு இருப்பது, காவல்துறையினர் விசாரணையை திசை திருப்பும் முயற்சியா (அ) அவர்கள் திட்டமிட்டிருக்கும் சதி வேலை பற்றிய குறிப்பா எனும் கோணத்தில் காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.

Categories

Tech |