குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இறுதிப்போட்டிக்கு தேர்வான இரண்டு போட்டியாளர்கள் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிரபல நிகழ்ச்சிகளில் ஒன்றான குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர் . இந்த நிகழ்ச்சியில் கோமாளிகளை வைத்துக்கொண்டு போட்டியாளர்கள் சமையல் செய்ய படாதபாடு படும் காட்சிகள் ரசிகர்களை வயிறு குலுங்க சிரிக்க வைக்கிறது . தற்போது மிக கலகலப்பாக நடைபெற்று கொண்டிருக்கும் இந்த நிகழ்ச்சியில் பாபா பாஸ்கர் ,அஸ்வின், ஷகிலா ,கனி ஆகியோர் விளையாடி வருகின்றனர்.
இந்த வாரம் இந்த நிகழ்ச்சியில் சிறப்பாக சமைக்கும் இருவர் இறுதிப்போட்டிக்கு தேர்வு செய்யப்படுவர். இந்நிலையில் இறுதிப்போட்டிக்கு நுழையப் போவது யார்? என்ற தகவல் வெளியாகியுள்ளது. ஏராளமான ரசிகர்கள் மனதில் இடம் பிடித்த அஸ்வின் மற்றும் கனி இருவரும் இறுதிப்போட்டிக்கு தேர்வாகியுள்ளனர் . மேலும் இவர்கள் இருவரும் ஒன்றாக எடுத்துக் கொண்ட புகைப்படம் ஒன்று வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது.