குக் வித் கோமாளி 2 நிகழ்ச்சியில் புகழ் தான் தன்னுடைய பேவரைட் கோமாளி என செப் வெங்கடேஷ் பட் கூறியுள்ளார் .
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி 2 நிகழ்ச்சிக்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்தது. முதல் சீஸனை விட 2வது சீசனுக்கு ரசிகர்கள் பெரிய ஆதரவு கொடுத்தனர். கடந்த சில மாதங்களாக கலகலப்பாக நடைபெற்றுவந்த குக் வித் கோமாளி 2 நிகழ்ச்சி சமீபத்தில் வெற்றிகரமாக நிறைவடைந்தது. இறுதிப் போட்டியில் சிறப்பாக சமைத்து கனி டைட்டிலை வென்றார்.
இந்நிலையில் இந்த நிகழ்ச்சியின் நடுவர்களில் ஒருவரான செப் வெங்கடேஷ் பட் விருது விழா ஒன்றில் கலந்து கொண்ட போது குக் வித் கோமாளியில் உங்களுக்கு பிடித்த கோமாளி யார்? என கேட்டுள்ளனர். இதற்கு பதிலளித்த வெங்கடேஷ் பட் புகழ் தான் தன்னுடைய பேவரைட் கோமாளி என கூறியுள்ளார். மேலும் அவர் பாபா பாஸ்கர், அஸ்வின், கனி ஆகியோரையும் தனக்கு பிடிக்கும் என்று கூறியுள்ளார்.