குக் வித் கோமாளி பிரபலம் கனியின் சகோதரி நிரஞ்சனியின் பிறந்தநாள் கொண்டாட்ட புகைப்படம் வெளியாகியுள்ளது.
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி சீசன் 2 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டவர் கனி. இவர் இதற்கு முன் சில திரைப்படங்களில் காஸ்டியூம் டிசைனராக பணிபுரிந்துள்ளார் . இதன்பின் இவர் குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் ஏராளமான ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார். மேலும் இவர் இந்த நிகழ்ச்சியின் இறுதிப் போட்டியில் சிறப்பாக சமைத்து டைட்டிலை வென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் கனி தனது சகோதரி நிரஞ்சனியின் பிறந்தநாளை செம ஜாலியாக கொண்டாடியுள்ளார். தற்போது நிரஞ்சனி பிறந்தநாள் கொண்டாட்டத்தின் போது எடுக்கப்பட்ட புகைப்படம் வெளியாகியுள்ளது. அதில் கனி மற்றும் அவரது சகோதரிகள் விஜயலட்சுமி, நிரஞ்சனி ஆகியோர் உள்ளனர். இயக்குனர் தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் வெளியான கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படத்தில் நிரஞ்சனி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். சமீபத்தில் நிரஞ்சனி இயக்குனர் தேசிங்கு பெரியசாமியை திருமணம் செய்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.