Categories
சினிமா தமிழ் சினிமா

‘குக் வித் கோமாளி’ சிவாங்கியின் புதிய சாதனை… மகிழ்ச்சியுடன் அவரே வெளியிட்ட பதிவு… வாழ்த்தும் ரசிகர்கள்…!!!

குக் வித் கோமாளி சிவாங்கி இன்ஸ்டாகிராமில் தனக்கு 3 மில்லியன் பாலோயர்கள் கிடைத்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர் . கடந்த சில மாதங்களாக இந்த நிகழ்ச்சியின் இரண்டாவது சீசன் மிக கலகலப்பாக நடைபெற்று வந்தது . இதில் புகழ், பாலா, சிவாங்கி, சரத், மணிமேகலை உள்ளிட்ட பலர் கோமாளிகளாக கலக்கி வந்தனர் . மேலும் இந்த நிகழ்ச்சி மூலம் பிரபலமடைந்த பலருக்கும் படங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. இந்நிலையில் சிவாங்கி இன்ஸ்டாகிராமில் தனக்கு  3 மில்லியன் பாலோயர்கள் கிடைத்துள்ளதாக தெரிவித்துள்ளார் .

மேலும் அவர் தனது சமூக வலைதளப் பக்கத்தில் தனது ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார். குக் வித் கோமாளி பிரபலங்களில் யாருக்கும் இதுவரை 3 மில்லியன் பாலோயர்கள் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது . தற்போது சிவாங்கி சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி வரும் டான் படத்தில் நடித்து வருகிறார். மேலும் இவர் ஒரு சில படங்களில் நடிப்பதற்கு பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது .

Categories

Tech |