குக் வித் கோமாளி சீசன்-3 நிகழ்ச்சி நவம்பர் மாதம் தொடங்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சூப்பர் ஹிட் நிகழ்ச்சிகளில் ஒன்று குக் வித் கோமாளி. இந்த நிகழ்ச்சியில் தாமு, வெங்கடேஷ் பட் இருவரும் நடுவர்களாக பங்கேற்று வருகின்றனர். கடைசியாக நடந்து முடிந்த இரண்டாவது சீசனில் பாபா பாஸ்கர், மதுரை முத்து, ஷகிலா, பவித்ரா, தீபா, அஸ்வின், கனி, தர்ஷா ஆகியோர் போட்டியாளர்களாக கலந்து கொண்டிருந்தனர். மேலும் புகழ், சிவாங்கி, பாலா, மணிமேகலை, சுனிதா உள்ளிட்டோர் கோமாளிகளாக வந்து அசத்தினர்.
குக் வித் கோமாளி சீசன்-2 நிகழ்ச்சியில் கனி டைட்டிலை வென்றார். இதைத் தொடர்ந்து இந்த நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் எப்போது தொடங்கும் என ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர். இந்நிலையில் குக் வித் கோமாளி சீசன்- 3 நிகழ்ச்சி வருகிற நவம்பர் மாதம் தொடங்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. விரைவில் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.