Categories
சினிமா தமிழ் சினிமா

குக் வித் கோமாளி நிகழ்ச்சி செய்த சூப்பர் சாதனை… மகிழ்ச்சியுடன் சிவாங்கி வெளியிட்ட பதிவு…!!!

குக் வித் கோமாளி 2 நிகழ்ச்சி குறித்து சிவாங்கி தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். இந்த நிகழ்ச்சியின் முதல் சீசன் வெற்றி பெற்றதை தொடர்ந்து 2வது சீசன் கடந்த சில மாதங்களாக நடைபெற்று வந்தது. இந்த இரண்டாவது சீசனில் கலந்துகொண்ட போட்டியாளர்களும், கோமாளிகளும் மிகப்பெரிய அளவில் பிரபலமடைந்துள்ளனர். மேலும் இந்த நிகழ்ச்சி மூலம் பிரபலமடைந்த அஸ்வின், சிவாங்கி, புகழ், பவித்ரா உள்ளிட்ட பலருக்கும் படங்களில் நடிக்கும் வாய்ப்புகள் கிடைத்து வருகிறது.

கடந்த தமிழ் புத்தாண்டு தினத்தில் குக் வித் கோமாளி 2 நிகழ்ச்சியின் கிராண்ட் பினாலே எபிசோட் ஒளிபரப்பானது. இந்நிலையில் சென்ற வாரம் டிஆர்பி யில் குக் வித் கோமாளி நிகழ்ச்சி மிகப்பெரிய சாதனை செய்துள்ளது. இதுகுறித்து குக் வித் கோமாளி பிரபலம் சிவாங்கி தனது டுவிட்டர் பக்கத்தில் ‘நன்றி மக்களே இந்த சீசனை வெற்றிபெற செய்ததற்கு’ என பதிவிட்டுள்ளார்.

Categories

Tech |