Categories
சினிமா தமிழ் சினிமா

குக் வித் கோமாளி பாலாவை காதலிக்கிறீர்களா?… வெளிப்படையாக பதில் சொன்ன ரித்திகா…!!!

குக் வித் கோமாளி ரித்திகா தனது சமூக வலைதளப் பக்கத்தில் தனது ரசிகர்களின் கேள்விகளுக்கு பதிலளித்துள்ளார்.

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி சீசன் 2 நிகழ்ச்சி மிகப்பெரிய அளவில் ஹிட்டானது . இந்த சீசனில் வைல்ட் கார்ட் போட்டியாளராக கலந்து கொண்டு பிரபலமடைந்தவர் ரித்திகா. இந்த நிகழ்ச்சியில் இவரும் கோமாளியாக வரும் பாலாவும் சேர்ந்து செய்யும் ரகளைகள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது . மேலும் காமெடி ராஜா கலக்கல் ராணி நிகழ்ச்சியின் அறிமுக சுற்றில் பாலா- ரித்திகா இருவரும் வெண்ணிலவே வெண்ணிலவே பாடலுக்கு செம ரொமான்டிக்காக நடனமாடினர். இதனால் பாலா- ரித்திகா இருவரும் காதலிப்பதாக இணையத்தில் தகவல் பரவி வந்தது.

 

Watch Cooku with Comali Season 2 Full Episodes on Disney+ Hotstar

இந்நிலையில் ரித்திகா தனது சமூக வலைதளப் பக்கத்தில் தனது ரசிகர்களின் கேள்விகளுக்கு பதிலளித்துள்ளார். அப்போது ரசிகர் ஒருவர் பாலாவை காதலிக்கிறீர்களா? என கேட்டுள்ளார் . இதற்கு பதிலளித்த ரித்திகா ‘நானும் பாலாவும் நல்ல நண்பர்கள். குக் வித் கோமாளி நிகழ்ச்சியிலிருந்து இருவர்களும் நல்ல நண்பர்களாக இருந்து வருகிறோம். நிகழ்ச்சிக்காக நாங்கள் இருவரும் இணைந்து இது போல் பர்ஃபாமென்ஸ் செய்வது மக்களுக்கு பிடித்திருக்கிறது . இதைதான் நாங்கள் விரும்புகிறோம். மக்களை மகிழ்விப்பது மட்டுமே எங்கள் நோக்கம்’ என கூறியுள்ளார் .

Categories

Tech |