குக் வித் கோமாளி பிரபலம் பாலாவின் இளவயது புகைப்படம் வெளியாகியுள்ளது.
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சூப்பர் ஹிட் நிகழ்ச்சிகளில் ஒன்று குக் வித் கோமாளி. இந்த நிகழ்ச்சியில் போட்டியாளர்கள் கோமாளிகளை வைத்துக் கொண்டு சமையல் செய்ய படாத பாடு படும் காட்சிகள் ரசிகர்களை வயிறு குலுங்க சிரிக்க வைக்கிறது. மேலும் முதல் சீசனை விட இரண்டாவது சீசன் அதிக அளவு பிரபலமடைந்துள்ளது. இந்த இரண்டாவது சீசனில் சிவாங்கி, புகழ், மணிமேகலை, பாலா உள்ளிட்டோர் கோமாளிகளாக வந்து கலக்கினர். அதிலும் குறிப்பாக பாலாவின் ரைமிங் மற்றும் டைமிங் காமெடிகள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. இந்த நிகழ்ச்சி மூலம் பிரபலமடைந்த சிவாங்கி, புகழ் உள்ளிட்ட பலருக்கும் திரைப்படங்களில் நடிக்கும் வாய்ப்புகள் கிடைத்துள்ளது.
ஆனால் பாலாவுக்கு இதுவரை எந்த ஒரு பட வாய்ப்பும் கிடைக்கவில்லை என்பது போல் தெரிகிறது. விரைவில் இவருக்கும் வாய்ப்புகள் கிடைக்கும் என ரசிகர்கள் மனதார வாழ்த்தி வருகின்றனர். இந்நிலையில் பாலா தனது சமூக வலைதளப் பக்கத்தில் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் பாலா விஜய் டிவி பிரபலம் அமுதவாணனின் பிறந்தநாளுக்கு வாழ்த்து கூறி அவருடன் சில வருடங்களுக்கு முன் இணைந்து எடுத்துக் கொண்ட புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் நம்ம பாலாவா இது? என ஆச்சரியமடைந்துள்ளனர்.