குக் வித் கோமாளி பிரபலம் அஸ்வினுடன் செஃப் தாமுவின் மகள் எடுத்துக்கொண்ட செல்பி புகைப்படம் வெளியாகியுள்ளது.
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு ரசிகர்கள் ஏராளம். தற்போது மிக கலகலப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கும் குக் வித் கோமாளி 2 நிகழ்ச்சியில் போட்டியாளர்களும், கோமாளிகளும் இணைந்து காமெடியில் கலக்கி வருகின்றனர். மேலும் இந்த நிகழ்ச்சியின் நடுவர்கள் வெங்கடேஷ் பட் மற்றும் தாமு இருவரும் கோமாளிகளுக்கு இணையாக காமெடி செய்து அசத்தி வருகின்றனர் .
இந்த நிகழ்ச்சியில் இவர்கள் இருவரும் அவ்வப்போது கொடுக்கும் கவுண்டர்கள் ரசிக்கும் வகையில் இருக்கும் . இந்நிலையில் செஃப் தாமுவின் மகள் அக்ஷயா குக் வித் கோமாளி பிரபலம் அஸ்வினுடன் இணைந்து எடுத்துக்கொண்ட செல்பி புகைப்படத்தை தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். தற்போது இந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.