Categories
சினிமா தமிழ் சினிமா

‘குக் வித் கோமாளி’ பிரபலம் கனியின் இரண்டு மகள்களை பார்த்துள்ளீர்களா?… வெளியான அழகிய புகைப்படம்…!!!

குக் வித் கோமாளி பிரபலம் கனி தனது இரண்டு மகள்களுடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் வெளியாகியுள்ளது .

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிரபல நிகழ்ச்சிகளில் ஒன்று குக் வித் கோமாளி. தற்போது இந்த நிகழ்ச்சியின் இரண்டாவது சீசன் மிக கலகலப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிகழ்ச்சியில் போட்டியாளர்கள் கோமாளிகளை வைத்துக் கொண்டு சமையல் செய்ய படாத பாடு படும் காட்சிகள் ரசிகர்களை வயிறு குலுங்க சிரிக்க வைக்கிறது . இந்த நிகழ்ச்சியில் வரும் போட்டியாளர்களுக்கும் கோமாளிகளுக்கும்  தனித்தனியே ஏராளமான ரசிகர்கள் உள்ளனர் .

cooku with comali kani daughters photo குக் வித் கோமாளி கனி மகள்கள்

தற்போது இறுதி போட்டியை நோக்கி நகர்ந்து வரும் இந்த நிகழ்ச்சியில் பாபா பாஸ்கர், கனி, அஸ்வின், சகிலா ஆகியோர் விளையாடி வருகின்றனர். இவர்களில் ஆரம்பம் முதலே தனது சிறப்பான பங்களிப்பு மூலம் ரசிகர்கள் மத்தியில் கவனம் பெற்றவர் கனி. இவர் இயக்குனர் அகத்தியனின் மகளும் இயக்குனர் திருவின் மனைவியும் ஆவார் . இந்நிலையில் கனி தனது இரண்டு மகள்களுடன் எடுத்துக் கொண்ட அழகிய புகைப்படம் வெளியாகியுள்ளது.

Categories

Tech |