குக் வித் கோமாளி பிரபலம் அஸ்வின் தெலுங்கில் ராஜா ராணி என்ற சீரியலில் நடித்துள்ளார்.
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி நிகழ்ச்சி 2 மிகப்பெரிய அளவில் பிரபலமடைந்துள்ளது . கடந்த தமிழ் புத்தாண்டு தினத்தில் இந்த நிகழ்ச்சியின் இறுதிப்போட்டிக்கான எபிசோட் ஒளிபரப்பானது. அதில் இந்த சீசனின் டைட்டில் வின்னராக கனி தேர்வு செய்யப்பட்டார். இந்த சீசனில் கலந்துகொண்ட போட்டியாளர்கள் மற்றும் கோமாளிகளுக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். மேலும் இந்த நிகழ்ச்சி மூலம் பிரபலமடைந்த பலருக்கும் படங்களில் நடிக்கும் வாய்ப்புகள் கிடைத்து வருகிறது .
அந்த வகையில் சமீபத்தில் அஸ்வின் புதிய படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளதாக அறிவித்தார். இந்தப் படத்தில் அவருடன் இணைந்து குக் வித் கோமாளி புகழும் நடிக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு வருவதற்கு முன் அஸ்வின் ரெட்டைவால் குருவி, நினைக்கத் தெரிந்த மனமே உள்ளிட்ட தமிழ் சீரியல்களில் நடித்துள்ளார். இந்நிலையில் இவர் தமிழில் மட்டுமல்லாது தெலுங்கிலும் ஒரு சீரியலில் நடித்துள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. தெலுங்கில் ஒளிபரப்பான ராஜா ராணி சீரியலில் தான் அஸ்வின் கதாநாயகனாக நடித்துள்ளார் .