குக் வித் கோமாளி பிரபலம் மணிமேகலையின் பழைய புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது.
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி சிசன்-2 நிகழ்ச்சியில் கோமாளியாக கலக்கி வந்தவர் மணிமேகலை. இந்த நிகழ்ச்சியில் இவர் செய்யும் கலாட்டாக்களுக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். சமீபத்தில் மணிமேகலை வீட்டில் சமையல் செய்யும் போது தனது காலில் சுடுதண்ணீர் ஊற்றிக் கொண்டார். இதனால் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் சில எபிசோடுகளில் அவர் கலந்து கொள்ளவில்லை. இதன்பின் கிராண்ட் பினாலே நிகழ்ச்சியில் மணிமேகலை கோமாளியாக வந்து கலந்து கொண்டார்.
மேலும் நேற்று மணிமேகலைக்கு பிறந்தநாள் என்பதால் அவருக்கு சமூக வலைத்தளங்களில் ரசிகர்கள் வாழ்த்துக்கள் தெரிவித்து வந்தனர். இந்நிலையில் நடிகர் சிவகார்த்திகேயனுடன் மணிமேகலை எடுத்துக்கொண்ட பழைய புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது . இதைப்பார்த்த ரசிகர்கள் மணிமேகலையா இது?, குண்டாக இருக்கும் போதும் அழகாக இருக்கிறார் என கருத்துக்கள் தெரிவித்து வருகின்றனர்.