குக் வித் கோமாளி 2 இறுதிப்போட்டி ஒளிபரப்பாகும் நாள் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். தற்போது இந்த நிகழ்ச்சியின் இரண்டாவது சீசன் மிக கலகலப்பாக நடைபெற்று வருகிறது. கடந்த சீசனை விட இந்த சீசன் மிகப்பெரிய அளவில் ஹிட் அடித்துள்ளது . தற்போது இரண்டாவது சீசன் இறுதிகட்டத்தை எட்டியுள்ளது ரசிகர்களுக்கு வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் அஸ்வின், கனி, பாபா பாஸ்கர், சகிலா, பவித்ரா ஆகியோர் இறுதிப் போட்டிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
இவர்களில் யார் இந்த சீசனின் வெற்றியாளர்? என்பதை காண ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கின்றனர். இந்த வாரம் போட்டியாளர்கள் தங்களின் உறவினர்களுடன் இணைந்து இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளனர். இந்நிலையில் குக் வித் கோமாளி 2 இறுதிப்போட்டி வருகிற ஏப்ரல் 14ஆம் தேதி மதியம் 2 மணி முதல் மாலை 7 மணிவரை ஒளிபரப்பாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.