குக் வித் கோமாளி 2 கிராண்ட் பினாலேவில் பாடகி தீ கலந்து கொண்ட புகைப்படம் வெளியாகியுள்ளது.
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிரபல நிகழ்ச்சிகளில் ஒன்று குக் வித் கோமாளி. இந்த நிகழ்ச்சியின் முதல் சீசன் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து இரண்டாவது சீசன் கலகலப்பாக நடைபெற்று வந்தது . தற்போது இரண்டாவது சீசன் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது . இந்த நிகழ்ச்சியின் கிராண்ட் பினாலே எபிசோட் வருகிற ஏப்ரல் 14ஆம் தேதி மதியம் 3:30 மணிக்கு ஒளிபரப்பாக உள்ளது . இந்த கிராண்ட் பினாலேவின் முதல் புரோமோ வெளியாகி இருந்தது . அதில் ஸ்பெஷல் விருந்தினராக கலந்து கொண்ட சிம்பு கோமாளிகளுடன் இணைந்து கலாட்டா செய்கிறார்.
இந்நிலையில் கடந்த சில வாரங்களாக சமூக வலைத்தளங்களில் ட்ரண்டாகி வரும் ‘என்ஜாயி எஞ்சாமி’ பாடலை பாடி நடனமாடிய தீ , குக் வித் கோமாளி 2 கிராண்ட் பினாலே நிகழ்ச்சியில் கலந்துகொண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் அவர் இந்த நிகழ்ச்சியின் போட்டியாளர்களான தர்ஷா, ரித்திகா இருவருடன் இணைந்து எடுத்துக்கொண்ட கலக்கலான புகைப்படம் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது.