Categories
சினிமா தமிழ் சினிமா

குக் வித் கோமாளி 3-ல் பிக்பாஸ் பிரபலமா?… வெளியான புதிய தகவல்…!!!

குக் வித் கோமாளி சீசன் 3 நிகழ்ச்சியில் கலந்து கொள்வது குறித்து பிக்பாஸ் பிரபலம் சுசித்ரா பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். தற்போது இந்த நிகழ்ச்சியின் 2-வது சீசன்  இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. விரைவில் இறுதி போட்டிக்கான எபிசோட் ஒளிபரப்பாக உள்ளது. இந்த நிகழ்ச்சி முடிவடைவது ரசிகர்களுக்கு மிகுந்த வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது . மேலும் அடுத்த சீசன் எப்போது தொடங்கும் என மிக ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர்.

இந்நிலையில் குக் வித் கோமாளி 3 நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் போட்டியாளர்கள் குறித்த தகவல்கள் அவ்வப்போது வெளியாகிக் கொண்டிருக்கிறது. அந்த வகையில் பிக்பாஸ் -4 பிரபலம் சுசித்ராவிடம் ரசிகர் ஒருவர் குக் வித் கோமாளி மூன்றாவது சீசனில் நீங்கள் கலந்து கொள்ள வேண்டும் என சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இதற்கு பதிலளித்த சுசித்ரா ‘இதுதான் உங்களுக்கு ஆசை என்றால் தயவு செய்து என்னை விட்டுவிடுங்கள்’ என பதிவிட்டுள்ளார்.

Categories

Tech |