சமூக ஊடகங்களில் தினசரி பெரும்பாலான வீடியோக்கள் பதிவிடப்பட்டாலும் அவற்றில் ஒரு சில மட்டுமே பார்வையாளர்களை கவர்கிறது. அதிலும் குறிப்பாக விலங்குகளின் வீடியோகளுக்கு இணையத்தில் தனி ரசிகர் பட்டாளமே இருக்கின்றனர். இதற்கிடையில் குரங்குகள் குறித்த பல்வேறு வீடியோக்கள் அவ்வப்போது பகிரப்படுகிறது. தற்போது ஒரு குசும்புக்கார குரங்கின் வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது.
அந்த வீடியோவில் குரங்கு ஒன்று எந்தவொரு காரணமும் இன்றி சாலையில் நடந்து செல்லும் ஒரு முதியவரை உதைத்து விட்டு செல்வதை காண முடிகிறது. முதியவரை உதைத்து விட்டு அந்த குரங்கு மின்னல் வேகத்தில் ஓடி செல்கிறது. குரங்கு உதைத்ததால் முதியவர் கீழே விழுந்து விடுகிறார். வீடியோவில் குரங்கின் குறும்பை பார்த்து சிரிப்பு வந்தாலும், முதியவருக்காக பலர் வருத்தப்படுகின்றனர்.