குஜராத்தில் தசராவை முன்னிட்டு நடைபெற்ற வாள்த்திருவிழாவில் கண்களை கட்டிக்கொண்டு இரண்டு கைகளிலும் வாளை சுழற்றி ஒரு பெண் சாதனை படைத்துள்ளார்.
குஜராத்தில் தசரா திருவிழாவை முன்னிட்டு ராஜ்கோட் அரச குடும்பம் சார்பில் 5 நாட்களுக்கு நாள் திருவிழா நடைபெறுவது வழக்கமாகும். இந்த வாள்த்திருவிழாவில் பங்கேற்கும் போட்டியாளர் தங்களின் கண்களை கட்டிக் கொண்டு குனிந்து நிற்கும் இரு மனிதர்களின் மீது ஏறி நின்று தங்கள் இரண்டு கைகளில் கொடுக்கப்படும் வாள்களையும் சுழற்ற வேண்டும். இந்த ஆண்டும் இதே போல் வாள் திருவிழா நடைபெற்றது. இதில் அம்மாநிலத்தை சேர்ந்த ராஜபுத்திர பெண் பங்கேற்று சாதனை படைத்துள்ளார்.