குஜராத் மாநிலத்தில் உள்ள சுரேந்திர நகர் பகுதியில் இரு வெவ்வேறு சாலை விபத்து சம்பவங்களில் 4 பேர் பலியான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
லிமட்டி மற்றும் சுரேந்திர நகர் நெடுஞ்சாலையில் ஆட்டோ மீது அரசு பஸ் மோதிய விபத்தில் ஆட்டோ ஓட்டுநர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். அவருடைய மனைவி மற்றும் மகன் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். இதேபோல் குஜராத்திலுள்ள விதலபாரா என்ற இடத்தில் மினி லாரி ஒன்று ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்ததால் சாலையோரத்தில் இருந்த இரண்டு பெண்கள் மீது மோதியதில் மினி லாரி டிரைவர் மற்றும் இரண்டு பெண்கள் உட்பட 3 பேரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.