Categories
அரசியல் தேசிய செய்திகள்

குஜராத்தின் புதிய முதல்வர்…. பூபேந்திர படேல் இன்று பதவியேற்பு…!!!

குஜராத் மாநில முதல்-மந்திரியாக இருந்த விஜய் ரூபானி நேற்று முன்தினம் தன்னுடைய பதவியை திடீரென ராஜினாமா செய்தார். குஜராத் மாநிலத்தில் அடுத்த வருடம் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில் விஜய் ரூபானி ராஜினாமா செய்தது அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனையடுத்து புதிய முதல்வரை தேர்ந்தெடுப்பது குறித்து குஜராத் மாநில தலைநகர் காந்திநகரில் நேற்று பாஜக எம்எல்ஏக்கள் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் சட்டப்பேரவை பாஜக குழுத் தலைவராக எம்எல்ஏ பூபேந்திர படேல் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார்.

இதனைத்தொடர்ந்து குஜராத்தின் புதிய முதலமைச்சராக தேர்வு செய்யப்பட்டுள்ள பூபேந்திர படேல் இன்று பதவிப்பிரமாணம் எடுத்துக்கொள்கிறார். மேலும் புதிய அமைச்சரவையும் இன்று பதவியேற்கிறது. உத்திரப்பிரதேச மாநில ஆளுநரும். குஜராத் மாநில முன்னாள் முதல்வருமான ஆனந்திபென் படேலின் நம்பிக்கைக்குரியவராக பூபேந்திர படேல் கருதப்படுகிறார்.கடந்த 2014ஆம் வருடம் குஜராத் சட்டப்பேரவை தேர்தலில் முதன் முறையாக போட்டியிட்டு ஒரு லட்சம் வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி அடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |