வானிலிருந்து விழுந்த உலோக பந்தால் கிராம மக்கள் மிகவும் அதிர்ச்சி அடைந்து இருக்கின்றனர்.
குஜராத்தின் சுரேந்திரா நகர் மாவட்டத்தில் சாய்லா எனும் கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தில் திடீரென வானில் இருந்து உலகப் பந்து ஒன்று விழுந்திருக்கின்றது. அந்த பந்தின் உலோக சிதறல்களும் வயல்வெளியில் கிடைத்திருக்கின்றது. இதனால் அந்தப் பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். மேலும் இதே போன்று கேடா மாவட்டத்தின் உம்ரெத் மற்றும் நாடியாட் நகரங்களில் கருப்பு மற்றும் வெள்ளை வண்ணத்திலான உலக பந்துகள் கடந்த மூன்று நாட்களாக வந்து விழுந்திருக்கின்றன.
ஆனந்த் மாவட்டத்தின் மூன்று கிராமங்களிலும் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெற்றுள்ளது. இதனைத் தொடர்ந்து அந்த விசித்திர நிகழ்வு பற்றிய ஆய்வு செய்ய குஜராத்திலுள்ள இயற்பியல் ஆய்வுக்கூடம் முடிவு செய்திருக்கின்றது. இந்த ஆய்வுக்கூடமானது விண்வெளி அறிவியல் பற்றி ஆய்வு செய்யும் விண்வெளி துறையின் கீழ் செயல்பட கூடிய மாநில அமைப்பாகும். மேலும் ஆய்வு கூடத்தின் ஆரம்ப கட்ட ஆய்வில் அவை செயற்கைகோள் ஒன்றின் உடைந்த பொருட்கள் என தெரிய வந்திருக்கிறது என தெரிவிக்கப்படுகிறது.
இதற்கு முன்பாக கடந்த ஏப்ரல் மாதம் ஆரம்பத்தில் மராட்டியத்தின் சந்திராபூரில், சிந்தேவாஹி தாலுகாவிற்கு உட்பட்ட லட்போரி மற்றும் பவன்பூர் கிராமங்களில் இரவு நேரங்களில் இரண்டு உலோக பொருட்கள் மிகுந்த சத்தத்துடன் வந்து விழுந்து இருக்கின்றது. இதனால் அச்சம் அடைந்த கிராம மக்கள் தங்களது வீட்டுக்குள் ஓடி ஒளிந்திருக்கின்றனர். ஒரு சிலர் அரை மணிநேரம் வரை வீட்டில் இருந்து வெளியே வராமல் இருந்திருக்கின்றனர். மேலும் அந்த பொருட்களில் 3 மீட்டர் சுற்றளவு கொண்ட வளையம் ஒன்று இருந்திருக்கின்றது. இந்நிலையில் இதுபோன்ற கோள வடிவிலான மற்றொரு பொருள் கண்டெடுக்கப்பட்டு இருக்கிறது.இந்த நிலையில் அந்த வளையம் சூடாகவும் இருந்திருக்கின்றது.