Categories
தேசிய செய்திகள்

குஜராத்தில் மாணவிகளுக்கு பாரம்பரிய நடன பயிற்சி….. புதுமைகளை புகுத்தும் பள்ளி….. வித்தியாசமான முயற்சி….!!!

குஜராத் மாணவிகளுக்கு படிப்புடன் கலையை கற்பிக்கும் நோக்கில் மிசோரம் பாரம்பரிய நடன பயிற்சி அளிக்கப்பட்டு வருகின்றது.

குஜராத்தின் தபி மாவட்டத்தில் அம்பாக் கிராமத்தில் உள்ள பள்ளிக்கூடம் ஒன்றில் படிக்கும் மாணவிகளுக்கு படிப்புடன் சேர்த்து பிற மாநில கலாச்சாரம் மற்றும் நடனம் பயிற்றுவிக்கப்பட்டது. இது குறித்து சரஸ்வதி கன்னியா வித்யாலயா என்ற பள்ளியின் ஆசிரியை கூறியதாவது “4 ஆண்டுகளாக இந்த மாணவிகளுக்கு மிசோரம் பாரம்பரிய நடனம் என அழைக்கப்படும் சீரா நடனம் பயிற்றுவிக்கப்படுகின்றது.

ஒரு புதிய கலாச்சார நடனம் அறிமுகம் செய்ய வேண்டும் என்று நினைத்தோம். அதன்படி இந்த நடன பயிற்சி அளிக்கின்றோம். இந்த நடன நிகழ்ச்சிகளால் ஈட்டப்படும் வருவாய் ஆனது இந்த மாணவிகளின் நலனுக்கு பயன்படுத்தப்படுகின்றது. அவர்கள் இன்னும் சிறப்புடன் செயல்படுவார்கள் என்று அவர் தெரிவித்தார்.

Categories

Tech |