Categories
தேசிய செய்திகள்

மாசம், மாசம் ரூ1000 தாறோம்…! பெண்களே எங்களை விட்டுறாதீங்க.. குஜராத்தில் சூப்பர் அறிவிப்பு…!!

டெல்லி, பஞ்சாப் ஆகிய 2 மாநிலங்களில் ஆட்சியைப் பிடித்த ஆம்ஆத்மி கட்சி அடுத்ததாக குஜராத், கோவா உட்பட ஒரு சில மாநிலங்களில் ஆட்சியை பிடிக்க தீவிரமாக வேலைசெய்து வருகிறது. இந்நிலையில் அடுத்த வருடம் குஜராத் மாநிலத்தில் சட்டப் பேரவை தேர்தல் நடைபெற உள்ளதால், அம்மாநிலத்தில் ஆட்சியை பிடிக்க திட்டமிட்டு வருகிறது.

இந்த சூழ்நிலையில் குஜராத்தில் ஆம்ஆத்மி ஆட்சிக்கு வந்தால் 18 வயதுக்கு அதிகமான பெண்கள் அனைவருக்கும் மாதந்தோதும் 1000 ரூபாய் உதவித் தொகை வழங்கப்படும். இது இலவசம் கிடையாது எனவும் மக்களின் உரிமை எனவும் ஆம்ஆத்மி கட்சி நிறுவனர் மற்றும் டெல்லியின் முதலமைச்சருமான அரவிந்த்கெஜ்ரிவால் தெரிவித்திருக்கிறார். மக்கள் பணம் மக்களுக்கே சென்றைய வேண்டும் எனவும் சுவிஸ் வங்கிக்கு செல்ல கூடாது எனவும் அவர் கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |