Categories
தேசிய செய்திகள்

“குஜராத் சட்டசபை தேர்தல்”…. அவங்களுக்கு அதுல அக்கறையே இல்ல!…. தேர்தல் கமிஷன் வருத்தம்….!!!!

குஜராத் மாநிலத்தில் முதற்கட்ட தேர்தலில் நகர்ப்புற வாக்காளர்கள் மத்தியில் ஓட்டுபோட அக்கறையற்ற நிலை நீடிப்பதாக தேர்தல் கமிஷன் வருத்தம் தெரிவித்து உள்ளது.

இமாசலபிரதேசம் மாநிலத்தில் 68 இடங்களை கொண்டுள்ள சட்ட சபைக்கு சென்ற மாதம் 12ஆம் தேதி தேர்தல் நடைபெற்றது. 182 இடங்களைக் கொண்ட குஜராத் மாநில சட்ட சபைக்கு 2 கட்டங்களாக தேர்தல் நடத்தப்படும் என்று தேர்தல் கமிஷன் அறிவித்தது. அதன்படி முதற்கட்ட தேர்தல் டிச..1ஆம் தேதி நடந்து முடிந்துள்ளது. 2ஆம் கட்ட தேர்தல் நாளை (டிச..5) நடக்கவுள்ளது. இதனை முன்னிட்டு தேர்தல் கமிஷன் வெளியிட்ட அறிக்கையில் “இமாசலபிரதேசத்தில் நகர்ப்புற தொகுதிகளிலுள்ள வாக்காளர்களில் பலரும் ஓட்டு போடவில்லை.

சிம்லாவில் 62.53% வாக்குகளே பதிவாகியது. கடந்த தேர்தலை காட்டிலும் இது 13% குறைவு ஆகும். குஜராத்தில் முதற்கட்ட தேர்தலில் நகரங்களில் நடைபெற்ற வாக்குப்பதிவில், அங்கு உள்ள வாக்காளர்கள் ஓட்டுபோடுவதில் அக்கறையின்றி இருப்பது தொடர்கிறது என்பதையே காட்டுகிறது. இதன் காரணமாக வாக்குப்பதிவு சதவீதம் குறைந்து உள்ளது. குஜராத் மாநிலத்தில் சென்ற தேர்தலுடன் ஒப்பிடுகையில் இந்த தேர்தலில் நகரங்களில் வாக்குப்பதிவு குறைந்திருக்கிறது..

Categories

Tech |