Categories
தேசிய செய்திகள்

குஜராத் சட்டசபை தேர்தல்… 40 வருடங்களாக பிரச்சாரத்திற்கு தடை..! இப்படி ஒரு கிராமமா…?

குஜராத்தில் ராஜ்கோட் மாவட்டத்தில் ராஜ் சமதியாலா என்னும் கிராமத்தில் எராளமான மக்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில் இந்த கிராமத்திற்குள் நுழைந்து பிரச்சாரம் செய்வதற்கு எந்த ஒரு அரசியல் கட்சி நிற்கும் அனுமதி இல்லை. ஏனென்றால் பிரச்சாரத்திற்காக வேட்பாளர்களை கிராமத்திற்குள் விட்டால் அந்த பகுதிக்கு அவர்கள் ஏதேனும் தீங்கு செய்து விடுவார்கள்  கிராம மக்கள் நினைக்கின்றனர். மொத்தம் 1,200 பேர் வசித்து வரும் அந்த கிராமத்தில் 995 பேர் வாக்காளர்களாக இருக்கின்றனர்.

இந்த கிராமத்தில் தேர்தல் பிரச்சாரத்திற்கு தடை விதித்தது மட்டுமல்லாமல் யாரேனும் வாக்களிக்க வரவில்லை என்றால் அவர்களுக்கு 51 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கிராம வளர்ச்சி குழுவினர், தேர்தல் நேரத்தில் அதிக அளவில் வாக்குப்பதிவு இருக்க வேண்டும் என்பதற்காக இதுபோன்ற பல விதிகளை உருவாக்கி வைத்துள்ளனர். ஒருவேளை வாக்களிக்க முடியவில்லை என்றால் அந்த குழுவினரிடம் அதற்கான காரணம் பற்றி கூற வேண்டும். இந்த கிராமத்தில் 100% வாக்குகள் பதிவாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |