Categories
தேசிய செய்திகள்

குஜராத் சட்டப்பேரவை தேர்தல்… பா.ஜ.க வேட்பாளராக ஜடேஜாவின் மனைவி அறிவிப்பு…!!!!

குஜராத் சட்டப்பேரவை தேர்தலில் பாஜக வேட்பாளராக ஜடேஜாவின் மனைவி களமிறங்கியுள்ளார்.

குஜராத் சட்டப்பேரவைக்கு இரண்டு கட்டமாக தேர்தல் நடைபெற இருக்கின்ற நிலையில் தேர்தலில் பா.ஜ.க, காங்கிரஸ், ஆம் ஆத்மி என மும்முனை போட்டி நிலவி வருகிறது. இந் நிலையில் 152 தொகுதிகளை கொண்ட பேரவைக்கு முதல் கட்ட வேட்பாளர் பட்டியலை பா.ஜ.க நேற்று வெளியிட்டுள்ளது. அதன்படி முதல் கட்ட பட்டியலில் 160 வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்ட நிலையில், கட்லோடியா தொகுதியில் குஜராத் முதல்வர் பூபேந்திர பட்டேலும், மஜுரா தொகுதியில் உள்துறை அமைச்சர் ஹார்ஸ் சங்கவியும் போட்டியிடுகின்றார்கள். அதேபோல் காங்கிரஸிலிருந்து பாஜகவில் இணைந்த ஹர்திக் பட்டேல் விரம்கம் தொகுதியில் போட்டியிட உள்ளார். இந்த சூழலில்  கிரிக்கெட் வீரரான ஜடேஜாவின் மனைவி ரிவாபாவை ராம்நகர் வடக்கு தொகுதியில் பா.ஜ.க அணி களம் இறக்கி இருக்கிறது.

Categories

Tech |