குஜராத் தேர்தலில் மீண்டும் பாஜக அதிக இடங்களை கைப்பற்றியுள்ளது.
குஜராத் மாநிலத்தின் சட்டப்பேரவை தேர்தல் 2 கட்டங்களாக நடைபெற்றது. இந்த தேர்தலின் முடிவுகள் வெளியிடப்படாது . இந்நிலையில் 182 தொகுதிகளில் 156 தொகுதிகளை பாஜக கைப்பற்றியுள்ளது. இதனை தொடர்ந்து காங்கிரஸ் 17 தொகுதிகளிலும், ஆம் ஆம்மி 5 தொகுதிகளும் வெற்றி பெற்றது. இதில் வெற்றி பெற்றவர்களில் ஒரே ஒருவர் மட்டும் இஸ்லாமிய மதத்தை சேர்ந்தவர்.
இந்நிலையில் காங்கிரஸ் வேட்பாளராக களம் இறங்கிய இம்ரான் ஹிடவாலா தன்னை எதிர்த்து போட்டியிட்ட பூஷன் புட்டோவை விட 13 ஆயிரத்து 658 வாக்குகளை அதிகமாக பெற்றுள்ளார். இந்த தொகுதி இஸ்லாமிய மதத்தினர் பெரும்பான்மையாக கொண்ட தொகுதி ஆகும். இந்நிலையில் 182 பேரில் இவர் ஒருவர் மட்டுமே இஸ்லாமிய மதத்தை சேர்ந்தவர் என்பதால் இவருக்கு பலரும் தங்களது வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.