குஜராத் சட்டமன்ற தேர்தலின் 2ஆம் கட்ட வாக்குப்பதிவு இன்று 93 சட்டப்பேரவை தொகுதிகளுக்கு முடிவடைந்தது. மொத்தம் மாலை 5 மணி வரை 56.68% வாக்குகள் பதிவாகி உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பாஜக, காங்கிரசுடன் இம்முறை ஆம் ஆத்மியும் இணைந்துள்ளதால் முடிவுகள் மிகவும் சுவராசியமாக இருக்கும். இந்நிலையில், தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பு முடிவுகளின் படி, அங்கு பாஜக 117-40, ஆம் ஆத்மி 6 – 13, காங்கிரஸ் 6- 13தொகுதிகளை கைப்பற்றும் என டைம்ஸ் ஆஃப் இந்தியா கருத்து கணிப்பு முடிவுகள் தெரிவித்துள்ளன.
250 வார்டுகள் கொண்ட டெல்லி மாநகராட்சி தேர்தலில் 149 முதல் 171 வார்டுகள் வரை ஆம் ஆத்மி கைப்பற்றும் என்று இந்திய டுடே, ஆக்ஸ் மை இந்தியா உள்ளிட்ட ஊடகங்கள் கணித்துள்ளன. பாஜக 60 முதல் 91 வார்டுகளும், காங்கிரஸ் 3 முதல் 7 வார்டுகளும், மற்றவை 5 முதல் 9 வார்டுகளும் கைப்பற்றும் என்று கருத்து கணிப்பு முடிவுகள் வெளியாகியுள்ளது. கருத்துகணிப்புப்படி நடந்தால், இது பாஜகவுக்கு பெரும் பின்னடைவாக பார்க்கப்படும்.