Categories
தேசிய செய்திகள்

குஜராத் தேர்தல்: பிரதமரின் செல்வாக்கு நிரூபிக்கப்பட்டு இருக்கு!…. பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா ஓபன் டாக்….!!!!

182 உறுப்பினர்கள் கொண்ட குஜராத் சட்டப்பேரவைக்கு இரண்டு கட்டங்களாக டிசம்பர் 1, 5ல்  தேர்தல் நடைபெற்றது. 68 உறுப்பினர்கள் கொண்ட இமாச்சலப்பிரதேச சட்டப்பேரவை ஒரே கட்டமாக நவம்பர் 12ல் தேர்தல் நடைபெற்றது. குஜராத், இமாச்சலில் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது.

பெரும் எதிர்பார்ப்பு இடையே குஜராத்,  இமாச்சலபிரதேசத்தின் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. இமாச்சலப் பிரதேசத்தில் ஆட்சியை தக்கவைக்க பாஜகவும்,  ஆட்சியைப் பிடிக்க காங்கிரசும் தீவிரம் காட்டுகின்றன. குஜராத்தில் 37 மையங்களில் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. குஜராத் – இமாச்சலில் பாஜக, காங்கிரஸ், ஆம் ஆத்மி இடையே மும்முனைப் போட்டி நிலவுகிறது.

இந்நிலையில் குஜராத் மாநில தேர்தலில் பா.ஜ.க பெரும்பான்மைக்கு அதிகமாக தொகுதிகளை கைப்பற்றி வெற்றி பெறும் தருவாயில் இருக்கிறது. இந்த நிலையில் இதுகுறித்து பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா பேசியதாவது, நாடு முழுவதும் பிரதமர் மோடிக்கு இருக்கும் செல்வாக்கு இந்த தேர்தல் வாயிலாக நிரூபிக்கப்பட்டு இருக்கிறது. 2024 தேர்தல் குறித்து இனி எந்த விவாதமும் தேவையில்லை என கூறியுள்ளார்.

Categories

Tech |