குஜராத் தொங்கு பாலம் விபத்து தொடர்பான விசாரணை நவம்பர் 14ஆம் தேதி நடைபெறும் என உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ளது.
குஜராத்தில் நூற்றாண்டு பழமை வாய்ந்த மோர்பி தொங்கு பாலம் கடந்த ஞாயிற்றுக்கிழமை அறுந்து விழுந்த விபத்தில் 141 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த பாலத்தில் புனரமைப்பு பணிகளை தயார் நிறுவனம் மேற்கொண்டு வந்த சூழலில் அரசிடம் அனுமதி பெறாமல் திட்டமிட்ட படுவதற்கு முன்பாக பாலம் திறக்கப்பட்டதாக இருந்த குற்றச்சாட்டில் தனியார் நிறுவனத்தை சேர்ந்த 9 பேர் கைது செய்யப்பட்டிருக்கின்றனர்.
இந்த சூழலில் இந்த விபத்து பற்றி ஓய்வு பெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி தலைமையில் விசாரணை நடத்த வேண்டும் என நாட்டிலுள்ள பழமை வாய்ந்த பாலங்களை தணிக்கை செய்ய கோரிக்கை வழக்கறிஞர் விஷால் திவாரி தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் பொதுமனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மேலும் இந்த மனுவை ஏற்றுக் கொன்ட உச்ச நீதிமன்றம் வழக்கின் விசாரணையை நவம்பர் 14ஆம் தேதி நடைபெறும் என அறிவித்துள்ளது.