Categories
தேசிய செய்திகள்

குஜராத் தொங்கு பாலம் விபத்து… பிரதமர் மோடி வருகையால் பொலிவு பெறும் மருத்துவமனை…? காங்கிரஸ் கட்சி விமர்சனம்…!!!!!

பிரதமர் மோடியின் வருகையால் மோர்பி மருத்துவமனை புதுபொலிவு பெறுவதாக காங்கிரஸ் கட்சி விமர்சனம் செய்துள்ளது.

குஜராத் மோர்பி பகுதியில் மச்சு நதியின் மீது அமைக்கப்பட்ட தொங்கு பாலம் கடந்த ஞாயிற்றுக்கிழமை அறுந்து விழுந்ததில் 134 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த நிலையில் மோர்பி நதியில் தொங்கு பாலம் அறுந்து விபத்து நடைபெற்ற பகுதியை பிரதமர் மோடி செவ்வாய்க்கிழமை நேரில் பார்வையிட உள்ளார். மேலும் விபத்தில் காயம் அடைந்து மோர்பி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களையும் நேரில் சந்தித்து பிரதமர் மோடி நலம் விசாரிக்க இருக்கின்றார். பிரதமர் மோடியின் வருகையை முன்னிட்டு அரசு மருத்துவமனை ஊழியர்களும் மாவட்ட நிர்வாகம் சார்பிலும் தூய்மைப்படுத்தும் பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. 300 படுக்கை வசதிகள் கொண்ட மருத்துவமனைக்கு வர்ணம் பூசுதல், சுத்தப்படுத்துதல் போன்ற பல்வேறு பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

இந்த மருத்துவமனையின் தற்போது 6 பேர் சிகிச்சை பெற்றுக் கொண்டிருக்கின்றனர். இதுவரை 56 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். மேலும் மருத்துவமனையின் நுழைவு வாயில் பகுதியில் மஞ்சள் நிறத்திலும் மருத்துவமனையின் உள்பகுதிகள் வெள்ளை நிறத்திலும் வர்ணம் பூசப்பட்டு இருக்கிறது. இதனை காங்கிரஸ் கட்சி தனது twitter பக்கத்தில் புகைப்படத்துடன் பகிர்ந்து விமர்சனம் செய்திருக்கின்றது. இரவோடு இரவாக அரசு மருத்துவமனையை சீரமைக்கும் பணிகள் நடைபெற்றுக் கொண்டிருப்பதாகவும் வர்ணம் பூசும் பணிகள் உட்பட புதிதாக டைல்ஸ் ஓட்டுதல் என பிரதமர் மோடியின் வருகைக்காக மருத்துவமனை அழகுப்படுத்தும் பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது என கூறப்பட்டிருக்கிறது.

Categories

Tech |