குஜராத்தில் நூறாண்டுகளுக்கு மேல் பழமையான மோர்பி தொங்கு பாலம் அறுந்து விழுந்த விபத்தில் இதுவரை 135 பேர் உயிரிழந்திருக்கின்றனர். மேலும் ஆற்றில் இருந்து 170 பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர் ஆற்றுக்குள் மேலும் சிலர் விழுந்திருக்கலாம் என அஞ்சப்படுவதனால் மீட்பு மற்றும் தேடுதல் பணிகள் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்த துயர சம்பவத்திற்கு உலக நாடுகளில் இருந்து இரங்கல் தெரிவிக்கப்பட்டு வருகிறது. இந்த சூழலில் குஜராத் விபத்திற்கு சீன அதிபர் ஜின்பிங் இரங்கல் தெரிவித்திருக்கிறார்.
மேலும் இது தொடர்பாக ஜனாதிபதி திரவுபதி முர்மு மற்றும் பிரதமர் நரேந்திர மோடிக்கு சீன அதிபர் ஜின்பிங் இரங்கல் செய்தி அனுப்பியுள்ளார். அதில் கூறப்பட்டிருப்பதாவது, சீன அரசாங்கம் மற்றும் சீன மக்கள் சார்பாக குஜராத் பாலம் விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். அது மட்டுமல்லாமல் அவர்களது குடும்பத்தினருக்கும் காயம் அடைந்தவர்களுக்கும் எங்களது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக் கொள்கிறேன் என கூறப்பட்டிருக்கிறது.