Categories
தேசிய செய்திகள்

குஜராத் பால விபத்து…”ஒருபுறம் வலி.. மற்றொருபுறம் கடமை”… பிரதமர் மோடி பேச்சு…!!!!!

குஜராத் பால விபத்து சம்பவம் பற்றி பிரதமர் மோடி உருக்கமாக பேசியுள்ளார்.

குஜராத்தின் கோவாடியாவில் பிரதமர் மோடி கலந்துகொண்டு பேசிள்ளார். அப்போது, குஜராத் பால விபத்து சம்பவத்தால் எனது இதயம் வலியுடன் காணப்படுகிறது. இது ஒரு புறம் வலி நிறைந்து இதயமாக இருந்தாலும் மற்றொருபுறம் கடமைக்கான பாதை இருக்கிறது. தான் இங்கு இருந்தாலும் என் மனம் முழுவதும் மோர்பியாவில் பாதிக்கப்பட்டவர்களுடன் இருக்கிறது. மேலும் இந்தியாவின் முன்னேற்றத்தால் கொல்லப்படும் அடைந்த சக்திகள் இன்றும் இருக்கிறது. அவர்கள் நம்மை உடைக்கவும் பிரிக்கவும் முயற்சி செய்து வருகின்றார்கள் ஜாதியின் பெயரால் நம்மை எதிர்த்துப் போராட கதைகள் உருவாக்கப்படுகிறது.

மேலும் மாநிலங்களின் பெயரால் நம்மை பிரிக்க முயற்சி நடைபெறுகின்றது. ஒரு இந்திய மொழியை மற்றொரு இந்திய மொழிக்கு எதிரியாகும் பிரச்சாரங்கள் நடத்தப்படுகிறது. மக்கள் ஒருவரை ஒருவர் சேர்க்காமல் ஒருவரை ஒருவர் விட்டு விலகி செல்லும் விதமாக வரலாறு முன்வைக்கப்படுகின்றது. மேலும் பல நூற்றாண்டுகளாக ஆட்சி செய்த அரசு குடும்பங்கள் நாட்டின் ஒற்றுமைக்காக ஒரு புதிய அமைப்பிற்காக தங்கள் உரிமைகளை அர்ப்பணித்திருக்கின்றனர். சுதந்திரத்திற்கு பின் பல தசாப்தங்களாக இந்த பங்களிப்பு புறக்கணிக்கப்பட்டுள்ளது. முன்னாள் அரச குடும்பங்களின் தியாகங்களுக்காக அர்ப்பணிக்கப்பட்ட ஒரு அருங்காட்சியகம் ஏக்தா நகரில் கட்டப்படும் என தெரிவித்துள்ளார்.

Categories

Tech |