பிரதமர் பால விபத்து குறித்து ஆலோசனை நடத்தியுள்ளார்.
குஜராத் மாநிலத்தில் உள்ள மோர்பி பகுதியில் மச்சு நதி அமைந்துள்ளது. இந்த நதியின் குறுக்கே அமைக்கப்பட்டிருந்த தொங்கு பாலம் கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை அதிக எடை காரணமாக அறுந்து விழுந்தது. இந்நிலையில் பாலத்தில் இருந்து பொதுமக்கள் அனைவரும் நதியில் விழுந்தனர். இந்த விபத்தில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை இதுவரை 135 ஆக அதிகரித்துள்ளது. மேலும் 17 பேர் கடுகாயங்களுடன் மீட்க பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் பிரதமர் நேற்று பால விபத்து குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். அந்த ஆலோசனைக் கூட்டத்தில் மீட்பு பணிகள் குறித்தும், பாதிக்கப்பட்டவர்களுக்கு அளிக்கப்பட்டு வரும் உதவிகள் குறித்தும் பிரதமரிடம் அதிகாரிகள் விளக்கினர். இதனை கேட்ட பிரதமர் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்துடன் அதிகாரிகள் தொடர்பில் இருந்து அவர்களுக்கு வேண்டியவற்றை செய்து கொடுக்க வேண்டும் என கூறியுள்ளார்.