குஜராத் மாநில முதல்-மந்திரி விஜய் ரூபாவானி தன்னுடைய பதவியை திடீரென ராஜினாமா செய்தார். இதனையடுத்து மாநில ஆளுநரை சந்தித்து தன்னுடைய ராஜினாமா கடிதத்தை வழங்கினார். குஜராத் மாநிலத்தில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள நிலையில் விஜய் ரூபாவானி தனது பதவியை ராஜினாமா செய்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், பிரதமர் மோடியின் தலைமையில் குஜராத் மாநிலத்தின் மேம்பாட்டுக்கு பல்வேறு திட்டங்கள் செயல்படுத்த முடிந்தது.
மக்களுக்காக சேவை சேவையாற்றியதில் மிக்க மகிழ்ச்சி. ஆட்சிப் பொறுப்பில் இருப்பவர்கள் எல்லாம் மாறுவது இயற்கையான ஒன்றுதான் என்று தெரிவித்தார். இதனையடுத்து குஜராத்தில் புதிய முதலமைச்சரை தேர்வு செய்வதற்காக பாஜக எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் இன்று நடக்கிறது. இந்த ஆலோசனைக்கு பிறகு மத்திய சுகாதார அமைச்சர் மன்சுக் மாண்ட்வியா, துணை முதல்வர் நிதின் படேல் ஆகியோரில் ஒருவர் தேர்வு செய்யப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகின்றது.