Categories
தேசிய செய்திகள்

குஜராத் மருத்துவமனையில் இடமில்லை… சென்னை வந்த தொழிலதிபர்…!!

குஜராத் மருத்துவமனையில் இடம் இல்லாத காரணத்தினால் தனி விமானம் பிடித்து சென்னை வந்து தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார் ஒரு தொழிலதிபர்.

இந்தியாவில் கொரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்துக் கொண்டு வருகின்றது. இவற்றை கட்டுக்குள் கொண்டு வருவதற்காக மத்திய அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இருப்பினும் தொற்று குறைந்தபாடில்லை. பல மாநிலங்களில் ஆக்சிஜன் பற்றாக்குறை காரணமாக நோயாளிகள் உயிரிழக்கும் நிலை உருவாகியுள்ளது. அதுமட்டுமில்லாமல் பல மருத்துவமனைகளில் படுக்கை வசதியும் இல்லை.

இதேபோன்று குஜராத்தில் இருக்கும் தொழிலதிபர் ஒருவர் அம்மாநிலத்தில் கொரோனா சிகிச்சைக்கு மருத்துவமனையில் இடம் கிடைக்காததால் தனி விமானம் மூலம் சென்னை வந்தார். மேலும் அவர் நுங்கம்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருடைய பெயரை அதிகாரிகள் வெளியிட விரும்பவில்லை.

Categories

Tech |