Categories
அரசியல்

“குஜராத் மாடல்” அதானியின் ஏஜெண்டாக பிரதமர் மோடி இருக்கிறார்….. டான் அசோக் பகீர் தகவல்கள்….!!!

தி.மு.க இளைஞரணி சார்பில் கருத்தரங்கம் மற்றும் திராவிட மாடல் பயிற்சி பாசறை நடைபெற்றுள்ளது.

திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள நாங்குநேரியில் நெல்லை கிழக்கு மாவட்ட இளைஞர் அணி சார்பில் கலைஞர் 99-வது கருத்தரங்கம் மற்றும் திராவிட மாடல் பயிற்சி பாசறை நடைபெற்றுள்ளது. இதற்கு மாவட்ட செயலாளர் ஆவுடையப்பன் தலைமை தாங்கினார். இதில் சிறப்பு விருந்தினராக திரைப்பட எழுத்தாளர் டான் அசோக் கலந்து கொண்டார். அவர் கூட்டத்தில் பேசியதாவது, திராவிட மாடல் என்று தி.மு.க சொல்லுவது  புதிதாக இருந்தாலும் கூட, கடந்த 6 வருடங்களுக்கு முன்பாகவே குஜராத் மாடல் என்று சொல்லப்பட்டது. இந்த குஜராத் மாடல் என்பது அதானியின் தயாரிப்புகளை நாடு நாடாகச் சென்று விற்பது ஆகும். இதற்கு பிரதமர் மோடி ஏஜென்டாக செயல்படுகிறார். இது இந்தியாவின் மாடலாகவும் உள்ளது.

இது இந்தியாவின் பொருளாதாரம் மற்றும் மக்களின் ஒற்றுமையை சீரழிக்கும் திட்டமாக இருக்கிறது. இதை அழிக்கும் விதமாகத்தான் முதல்வர் ஸ்டாலின் இந்தியா முழுவதும் திராவிட மாடல் திட்டத்தை கொண்டு செல்ல வேண்டுமென்று விரும்புகிறார். இந்தத் திட்டம் பற்றி முதல்வர் ஸ்டாலின் அறிவித்தவுடனே அதை நாடு முழுவதும் எடுத்துச் செல்வதற்கான பணியை மேற்கொள்வது இளைஞரணி தான் என்றார். இதனையடுத்து மாநில திட்டக்குழுவின் துணைத்தலைவர் ஜெயரஞ்சன் பேசினார். அவர் பொருளாதாரம் மற்றும் சமுதாயத்தை மாற்றி அமைப்பதுதான் திராவிட மாடல் என்றார். கடந்த 50 ஆண்டுகளுக்கு முன்பாக இந்தியாவில் குடிசை வீடுகளும், சாலை முழுவதும் சேறும் சகதியுமாக காணப்பட்டது.

இந்த நிலைமை தற்போது மாறி இந்தியா வளர்ச்சி பாதையை அடைந்துள்ளது. இந்த மாபெரும் வளர்ச்சியை மாற்றுவதற்காகவே புதிய கல்வி கொள்கை திட்டமானது பிரதமரால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அதன்பிறகு ஏராளமான திட்டங்கள் மூலம் நாம் வளர்ச்சியை அடைந்து வருவதற்கு அடித்தளமாக இருப்பது சமூகநீதி ஆகும் என்றார். இதேப்போன்று திராவிட மாடல் பயிற்சி பாசறை வண்ணார்பேட்டையிலும் நடைபெற்றது. இதற்கு மாவட்ட செயலாளர் அப்துல் கசாப் தலைமை தாங்கினார். இதில் திரைப்பட எழுத்தாளர் டான் அசோக் மற்றும் மாநில திட்டக்குழு துணைத்தலைவர் ஜெயரஞ்சன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Categories

Tech |