Categories
மாநில செய்திகள்

குடமுழுக்கு நடத்த அனுமதி… தமிழக அரசு உத்தரவு..!!

தமிழகத்தில் குடமுழுக்கு நடத்த அனுமதி வழங்கி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகிறது. இவற்றை கட்டுக்குள் வைக்க மாநில அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இருப்பினும் தொற்று தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே வருகின்றது. இதன் காரணமாக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி நேற்று சுகாதாரத் துறை அதிகாரிகளுடன் இணைந்து ஆலோசனை கூட்டத்தில் ஈடுபட்டார். இதையடுத்து பல முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டது. அது ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு, மற்ற நாட்களில் இரவு 10 மணி முதல் காலை 4 மணி வரை ஊரடங்கு என முக்கிய கட்டுப்பாடுகளை அறிவித்தது.

இதைத்தொடர்ந்து மதம் சார்ந்த திருவிழாக்கள் மற்றும் கூட்டங்களுக்கு ஏற்கனவே தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், 50 நபர்களுக்கு மிகாமல் கலந்துகொண்டு குடமுழுக்கு நடத்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இரவு நேர ஊரடங்கு இன் போது மருத்துவத் துறை சார்ந்த பணிகள், சரக்கு வாகனங்கள் மற்றும் எரிபொருள் வாகனங்கள் அனுமதிக்கப்படும். பத்திரிக்கை வினியோகம், மருத்துவமனைகள், மருத்துவ பரிசோதனை கூடங்கள் செயல்படும் தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது.

Categories

Tech |