Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

குடல் புண்னை ஆற்றும் மணத்தக்காளி கீரை சூப்… ஆட்டுகால் சூப்பை மிஞ்சும் நன்மைகள்!!

குடல்புண், குடல் வேக்காலம் உடனே ஆற வேண்டுமா? அப்போ மணத்தக்காளி சூப் குடிச்சு பாருங்க.

தேவையான பொருட்கள் :

மணத்தக்காளி கீரை           – ஒரு கையளவு                                                                                                                        சின்ன வெங்காயம்               – 10 (நறுக்கியது )                                                                                                                      அரிசி களைந்த நீர்                – ஒரு கப்                                                                                                                              சீரகம்                                            – 1/2  டீஸ்பூன்                                                                                                                              தேங்காய் துருவல்                  – 2 டீஸ்பூன்                                                                                                                                  காய்ந்த மிளகாய்                    – இரண்டு

மணத்தக்காளி சூப் செய்முறை:

ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து அதில் அரிசி களைந்த தண்ணீரை ஊற்றவும். பிறகு நறுக்கிய வெங்காயத்தை அதில் சேர்க்கவும். காய்ந்த மிளகாயை சிறு சிறு துண்டுகளாக உடைத்து அதில் போடவும். அரிசி களைந்த நீர் நன்றாக கொதி வந்தவுடன், மணத்தக்காளி கீரையை நன்றாக அலசி  அதில் சேர்க்கவும். உடனே அரை டேபிள்ஸ்பூன் சீரகத்தையும் , உப்பு (தேவைக்கேற்ப) சேர்த்து நன்றாக மசியும் தன்மைக்கு வேக வைக்கவும். பத்து நிமிடம் நன்றாக மூடி வைத்து வேகவிடவும். அதன்பின் திறந்து பார்த்தால் மணத்தக்காளி கீரை ரெடியாகி விடும். மேலும் சுவையூட்ட 2 டேபிள்ஸ்பூன்  திருவிய தேங்காயை அதில் சேர்க்கவும். அவ்வளவுதான் மணத்தக்காளி கீரை ரெடி. அதை சாதத்தில் பிசைந்து சாப்பிட்டாலும் , சூப்பாக குடித்தாலும் சரி இரண்டுமே ஒரே பலனை கொடுக்கும். குடலில் உள்ள புண்களை வயிற்றில் உள்ள புண்களை போக்குவதற்கான சிறந்த மருந்தாக இருக்கும்.

Categories

Tech |