Categories
தேசிய செய்திகள்

“குடிகாரனின் ஆயுள் ரொம்ப குறுகியது”…. பெண் பிள்ளைகளின் பெற்றோர் இதை மட்டும் பண்ணாதீங்க…. மத்திய மந்திரி கவுஷல் கிஷோர் வேதனை….!!!!!

குடிக்கும் ஆண்களுக்கு பெண்களை திருமணம் செய்து வைக்காதீர்கள் என மத்திய மந்திரி கவுஷல்  கிஷோர் கூறியுள்ளார்.

உத்திரபிரதேச மாநிலத்தில் உள்ள லம்புவா  சட்டசபை தொகுதியில் போதைப்பழக்க  மீட்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் மத்திய வீட்டு வசதி மந்திரி கவுஷல்  கிஷோர் கலந்து கொண்டார். பின்னர் அவர் கூறியதாவது, “எனக்கு ஆகாஷ் கிஷோர் என்ற மகன் இருந்தான். அவன் தனது நண்பர்களுடன் சேர்ந்து குடிக்க ஆரம்பித்தான். இதனால் நாங்கள் அவனை ஒரு போதை மீட்பு மையத்தில் சேர்த்தோம். அவன் அதிலிருந்து மீண்டு வந்தான். இதனை நம்பி நாங்கள் அவனுக்கு ஒரு பெண்ணை பார்த்து திருமணம் செய்து வைத்தோம். ஆனால் திருமணத்திற்கு பின் அவன் மீண்டும் குடிக்க தொடங்கினான். இதனால் உடல்நல குறைவு ஏற்பட்டு 2  ஆண்டுகளுக்கு முன்பு உயிரிழந்தான். அப்போது எனது பேரனுக்கு 2 வயது கூட ஆகவில்லை.

இதனால் எனது மருமகள் விதவை ஆகிவிட்டார். இந்நிலையில் உங்கள் மகள்கள் மற்றும் சகோதரிகளுக்கு இந்த நிலைமை வராமல் நீங்கள் பார்த்துக் கொள்ள வேண்டும். இதனையடுத்து குடிப்பழக்கம் உள்ளவர்களுக்கு உங்கள் வீட்டு பெண்களை திருமணம் செய்து கொடுக்காதீர்கள். ஏனென்றால் குடிப்பழக்கம் உள்ள ஒரு அதிகாரியை விட அந்தப் பழக்கம் இல்லாத ஒரு  கூலி தொழிலாளி நல்ல மாப்பிள்ளை தான். இந்நிலையில் நமது இந்தியாவில் ஆங்கிலேயரை எதிர்த்து நடந்த போராட்டத்தில் 6.32 லட்சம் பேர் தான் கொல்லப்பட்டனர். ஆனால் ஒவ்வொரு ஆண்டும் போதைப் பழக்கத்தால் 20 லட்சம் பேர் உயிரிழக்கின்றனர். எனவே நமது நாட்டில் பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு பள்ளி காலை பிரார்த்தனையின் போது போதை பழக்கத்தின் பாதிப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்” என அவர் கூறியுள்ளார்.

Categories

Tech |