Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

குடிகார மருமகனால் தொல்லை…! கதறி அழுத மகள், பேத்தி….. போட்டு தள்ளிய மாமனார் …!!

ராமநாதபுரம் மாவட்டம் எமனேஸ்வரம் அருகே மகள் பேத்திகளை நிம்மதியாக வாழ விடாத மருமகனை மாமனாரே வெட்டி கொலை செய்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

எமனேஸ்வரம் அருகே உள்ள கேணிக் கரையை சேர்ந்த நாகநாதனுக்கும் பொதுவை குடியை சேர்ந்த கருப்பையாவின் மகள் சங்கீதாவிற்கு பதிமூன்று ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இந்த இணையருக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர் . பரமக்குடி அருகே உள்ள அங்கன்வாடியில் சங்கீதா சத்துணவு அமைப்பாளராக பணியாற்றி வருகிறார்.

ஆனால் குடும்பத்தை கவனிக்காமல் நாக நாதன் நாள்தோறும் குடித்து விட்டு குழந்தைகள் மற்றும் மனைவியை தகாத வார்த்தைகளால் பேசி அடித்து கொடுமை செய்து வந்ததாக கூறப்படுகிறது. இது குறித்து சங்கீதா தன் தந்தை கருப்பையா விடம் கூறி முறையிட்டு உள்ளார். இந்த விவகாரம் தொடர்பாக கருப்பையா பலமுறை நாக நாதனை  கண்டித்துள்ளார்.

ஆனால் இந்த கொடுமை தொடர்ந்து நடைபெற்றதால் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இதில் ஆத்திரமடைந்த நாக நாதன் மீண்டும் குடித்துவிட்டு மனைவியையும், மகன்களையும் தாக்கினார். அப்போது அங்கு சென்ற கருப்பையா ஆத்திரம் அடைந்து நாக நாதனை அரிவாளால் வெட்டி கொலை செய்துவிட்டு காவல் நிலையத்தில் வைத்து சரணடைந்தார். இந்த நிகழ்வு குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |