Categories
சினிமா தமிழ் சினிமா

குடிக்காதீங்க…! அது கெட்ட பழக்கம்…. நான் குடிக்க மாட்டேனு நினைக்காதீங்க…. விஜய் சேதுபதி ஓபன் டாக்….!!!!

சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள தனியார் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் சிறப்பு விருந்தினராக நடிகர் விஜய் சேதுபதி கலந்து கொண்டார். அப்போது மாணவர்களிடையே பேசிய அவர், இந்த உலகில் யாரும் யாரிடமும் தோற்றுப் போவதில்லை. யாரும் யாரையும் வெற்றி கொள்வதுமில்லை. அது அந்த சமயத்தில் நடக்கும் ஒரு சிறிய நாடகம் மட்டும்தான்.

நான் 12 ஆம் வகுப்பில் அதிகமாக மார்க் வாங்கவில்லை. கல்லூரியில் சேர்வதற்காக லயோலா கல்லூரி உட்பட மூன்று கல்லூரிகளில் அப்ளிகேஷன் வாங்கினேன். அன்று இரவு என்னுடைய அப்பா வீட்டில் குடித்துக் கொண்டிருந்தார் என்று சொன்னதும் மாணவர்கள் ஆரவாரம் செய்தனர். இதுக்கெல்லாம் கைதட்டாதீங்க. அது கெட்ட பழக்கம் அவங்க அப்படி பழகிட்டாங்க. அதை ஸ்டைல் என நினைக்காதீங்க. இப்படி பேசுவதால் நான் குடிக்க மாட்டேன் என்று நினைக்க வேண்டாம் நானும் குடிப்பேன் என்று கூறினார்.

Categories

Tech |