Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

“குடிக்கிறதுக்கு கூட தண்ணீர் இல்ல”…. சிரமப்பட்ட கிராம மக்கள்…. சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு…!!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கே.பங்களா கிராமத்தில் 200 குடும்பத்தினர் வாழ்ந்து வருகின்றனர். கடந்த சில நாட்களாக இப்பகுதியில் குடிநீர் சரியாக விநியோகம் செய்யப்படவில்லை. இதனால் குடிநீர் கிடைக்காமல் சிரமப்பட்ட பொதுமக்கள் ஊராட்சி நிர்வாகத்திடம் புகார் அளித்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதனால் நேற்று காலை திண்டுக்கல்-நத்தம் சாலையில் காலி குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர்.

இதுகுறித்து அறிந்த கணவாய்ப்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் நிஷா ராமகிருஷ்ணன், ஊராட்சி செயலர் வெற்றி வேந்தன் ஆகியோர் சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி குடிநீர் வினியோகம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தனர். அதன்பிறகு அவர்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Categories

Tech |