கடலூரில் அமைக்கப்பட்ட முகாமில் உணவு தண்ணீர் கிடைக்காமல் இருப்பதாக ட்விட்டரில் வீடியோ வெளியாகியுள்ளது.
நிவர் புயல் முன்னெச்சரிக்கையாக கடலூர் மாவட்டத்தில் நிவாரண முகாமில் 50 ஆயிரத்திற்கு மேற்பட்டோர் தங்கவைக்கப்பட்டுள்ளனர். பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ள மாவட்ட நிர்வாகம் குடிசை மற்றும் தாழ்வான பகுதிகளில் உள்ளவர்கள் நிவாரண முகாமில் தங்க வைக்கப்பட்டு அனைத்து நடவடிக்கைகள் எடுத்து வருகின்றது. இந்நிலையில் கடலூர் மாவட்டம், புவனகிரி பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள நிவாரண முகாமில் மூன்று பேர் தங்க வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இரவு பன்னிரண்டரை மணி அளவில் முகாமிற்கு வந்த அவர்களுக்கு மாலை 3 மணி ஆகியும் உணவோ தண்ணீரோ வழங்கவில்லை என்று வேதனையோடு தெரிவித்துள்ளனர். இதனை தனியார் செய்தி, நிறுவன செய்தியாளர் பதிவு செய்து ட்விட்டரில் பகிர்ந்துள்ளார். இதுபோல நிவாரணமுகாம்கள் அமைக்கப்பட்டால் மக்கள் எப்படி முகாமிற்கு வீட்டைவிட்டு வருவார்கள் என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.